இங்கிலாந்து வீரர்களை காயப்படுத்துங்கள்: அவுஸ்திரேலிய வீரரின் பேச்சால் சர்ச்சை

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

ஆஷஸ் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை காயப்படுத்தி துடுப்பாட்ட வரிசையை சீர்குலையச் செய்யுங்கள் என ஹசில்வுட் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடர் வருகிற 23- ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து மூன்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

வெஸ்டன் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான, இரண்டு நாட்கள் கொண்ட முதல் பயிற்சி ஆட்டம் நாளை பெர்த் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் தொடக்க வீரர்களை காயப்படுத்தி முன்னணி துடுப்பாட்டக்காரர்களை பயத்திற்குள்ளாக்குங்கள் என ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கும் ஹசில்வுட் கூறியுள்ளார்.

வெஸ்டன் அவுஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக கவுல்டர்-நைல் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்குத்தான் ஹசில்வுட் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.

மேலும் கவுல்டர்-நைல் போன்ற வீரர்கள் அவர்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி, பயத்தை உருவாக்க முடியும். அப்படி செய்தால் நன்றாக இருக்கும் எனவும் ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...