டோனியை திட்டி தீர்த்த நெஹ்ரா: வைரலாகும் வீடியோ

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா அணியில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில் 13 வருடங்களுக்கு முன்னர் டோனியை திட்டும் வீடியோ வைரலாகியுள்ளது.

தற்போது, டோனி பெரிய நிலையை எட்டியுள்ளபோது, அப்போது அவரை திட்டிய சம்பவம் குறித்து சிரித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. பாகிஸ்தான் அணியின் சாகித் அப்ரிடி பேட்டிங் செய்ய, நெஹ்ரா பந்து வீசியுள்ளார்.

நெஹரா வீசிய பந்தை எட்ஜ் செய்து விடுகிறார் அப்ரிடி. பந்து நேராக கீப்பர் தோனியிடம் செல்ல, அங்கு கீப்பராக நின்றிருந்த டோனி கேட்சினை கோட்டை விடுகிறார்.

இதனால் கோபமடைந்த நெஹ்ரா, சரமாரியாக டோனியை திட்டித் தீர்க்கிறார். அந்த வீடியோ நெஹ்ரா ஓய்வு பெற்றுள்ள வேலையில் தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...