சிக்சர் விளாசுவதில் புதிய சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.

இரு தினங்களுக்கு முன்னர் நடந்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 55 பந்துகளில் 88 ஓட்டங்களை விளாசினார்.

இதில் ஆறு மெகா சிக்சர்களும் அடங்கும். இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடிந்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

அவர் 257 போட்டிகளில் 268 சிக்சர்களை அடித்து நொறுக்கியுள்ளார். 259 போட்டிகளில் 265 சிக்சர்கள் அடித்த ரெய்னா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...