சென்னை அணிக்கு திரும்பும் டோனி?

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
419Shares
419Shares
ibctamil.com

ஐபிஎல் பொதுக்குழுவின் புதிய திட்ட முன்வடிவால் சென்னை அணிக்கு டோனி திரும்பும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் புதிய திட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, புனே மற்றும் குஜராத் அணிகளுக்காக விளையாடிய வீரர்களில் மூன்று பேரை (ஒரு உள்நாட்டு வீரர், 2 வெளிநாட்டு வீரர்கள்) சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தங்கள் அணிக்கே எடுத்துக்கொள்ளலாம்.

அணி உரிமையாளர்கள் முன்னிலையில் இந்த திட்ட முன்வடிவு சமர்பிக்கப்படும் என்றும் ஐபிஎல் பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பேசிய ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா, “ கடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காகவும், புனே அணிக்காகவும் விளையாடிய வீரர்கள் மீண்டும் அவர்கள் பழைய அணிக்கே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

சென்னை அணிக்காக ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், டோனி ஆகியோர் ஆடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதுகுறித்த முறையான தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்