ஜிம்பாப்வே அணிக்கு திரும்பும் சீனியர் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாட உள்ள ஜிம்பாப்வே அணியில் சீனியர் வீரரான பிரண்டன் டெய்லர் மீண்டும் தெரிவாகியுள்ளார்.

ஜிம்பாப்வே அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

வரும் 21ம் திகதி தொடங்க உள்ள இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அணியின் சீனியர் வீரர் பிரண்டன் டெய்லர் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

கடைசியாக இந்தியாவிற்கு எதிராக 2015 உலக கிண்ணப் போட்டியில் விளையாடிய டெய்லர், பின்னர் நாட்டிங்காம் ஷயர் எனும் கவுண்டி அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாட ஒப்பந்தமானார்.

சமீபத்தில் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்த அவர் தற்போது மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers