இலங்கை அணியிலிருந்து குசால் பெரேரா அவுட்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டிவென்டி- 20 தொடரில் மோதும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியிலிருந்து குசால் பெரேரா நீக்கப்பட்டுள்ளார், கொழும்புவில் நடந்த உடல்தகுதி சோதனையில் அதிரடி ஆட்டக்காரர் குசால் பெரேரா தோல்வியடைந்துள்ளார்.

தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன் டிராபியில் விளையாடாமல் இருந்தார் குசால் பெரேரா.

இருப்பினும் அவர் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கையில் இலங்கை நிர்வாகம் அவரை T20 தொடருக்கு அணித்தலைவராக அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது உடல்தகுதி சோதனையில் அவர் தோல்வியடைந்துள்ளதால் T20 தொடருக்கான அணியில் அவர் இடம் பெற மாட்டார்.

மேலும் ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா அணித்தலைவராக செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த தொடர் வரும் 26ம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers