இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை வறுத்தெடுத்த கிரிக்கெட் ரசிகர்கள்: காரணம் இதுதான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 போட்டி, மழையின் ஈரப்பதம் காரணமாக மைதானம் சேறும் சகதியுமாக காட்சியளித்ததால் ரத்து செய்யப்பட்டது.

கடந்த இரு வாரங்களாக ஐதராபாத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தான் அங்கு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே, பணக்கார கிரிக்கெட் நிர்வாகமாக பிசிசிஐ திகழ்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் அதிகம் என்பதால், கோடிகளில் வருமானம் ஈட்டிவருகின்றது பிசிசிஐ.

இப்படியிருக்கும் நிலையில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் மைதானத்தை பிசிசிஐ சரியாக பராமரிக்க வில்லை என ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

இந்தியாவை விட வருமானம் குறைவாக ஈட்டும் இங்கிலாந்து, மைதான பராமரிப்பில் புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிலையில் இந்தியா இன்னும் பழைய முறைகளை பின்பற்றுவது வேதனையாக உள்ளது.

இதனை வெளிப்படுத்தும் விதமாக கிரிக்கெட் ரசிகர்களை பிசிசிஐ-யை டுவிட்டரில் சரமாரியாக வறுத்தெடுத்து வருகிறார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers