அவுஸ்திரேலியாவுக்கே அந்த அடி கொடுத்திருக்கு இந்தியா: எச்சரித்த நியூசிலாந்து பயிற்சியாளர்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால், இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இத்தொடர் முடிந்த பின்னர் நியூசிலாந்து அணி இந்தியா செல்லவுள்ளது. அந்த அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

இது குறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறுகையில், இந்திய ஆடுகளத்தில் முன்னணி அணியான அவுஸ்திரேலியா அணியே தடுமாறியதால் நியூசிலாந்து வீரர்கள் இந்திய ஆடுகளத்துக்கு ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்தியா செல்லும் வீரர்கள், விரைவாக அங்குள்ள தன்மைக்கு ஏற்ப மாற வேண்டும். இல்லை என்றால், இந்திய அணி சரியான பாடம் கற்றுக்கொடுத்துவிடும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers