கோஹ்லியை பின்னுக்கு தள்ளிய கேப்டன்கள்- டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Report Print Santhan in கிரிக்கெட்
679Shares
679Shares
lankasrimarket.com

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மூன்று வித போட்டிகளிலும் அசத்தி வருகிறது.

இந்நிலையில் ஐ.சி.சி சார்பில் டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித், இங்கிலாந்து அணியின் தலைவர் ரூட் மற்றும் நியூசிலாந்து அணியின் தலைவர் கானே வில்லியம்சன் ஆகியோர், இந்திய வீரர் கோஹ்லியை பின்னுக்கு தள்ளினர்.

ஸ்மித் 936 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரூட் 889 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், கானே வில்லியம்சன் 880 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் புஜாராவும், ஐந்தாவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும், ஆறாவது இடத்தில் கோஹ்லியும் உள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்திலும், டி20-க்கான தரவரிசைப்பட்டியலில் 5-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்