அசால்ட்டாக த்ரோ செய்து அவுட்டாக்கிய கோஹ்லி: நம்ப முடியாதது போல் புன்னகைத்த டோனி

Report Print Santhan in கிரிக்கெட்
842Shares
842Shares
lankasrimarket.com

ராஞ்சியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விராட் கோஹ்லியின் அற்புதமான த்ரோவால் கிறிஸ்டைன் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில்1-0 என்ற முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் 19-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீச, அதை எதிர்கொண்ட டேன் கிறிஸ்டைன் லாங் ஆன் திசையில் ஆடி விட்டு இரண்டு ஓட்டங்கள் ஓட நினைத்தார்.

ஆனால் லாங் ஆன் திசையில் நின்ற கோஹ்லியோ வேகமாக வந்த பந்தை பிடித்து, கீப்பரான டோனியிடம் துல்லியமாக எறிந்தார். பந்தை பிடித்த டோனி ரன் அவுட் செய்தார்.

அப்போது டோனி கோஹ்லியின் த்ரோவைக் கண்டு நம்பமுடியாதது போல் புன்னகைத்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்