வங்கதேசத்தில் கலக்க காத்திருக்கும் இலங்கை வீரர்கள்: இந்த முறை மகுடம் யாருக்கு?

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேசத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படும் பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடர் இந்தாண்டு நவம்பர் 8-ஆம் திகதி முதல் டிசம்பர் 9-ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதில் டாக்கா டைனமைட்ஸ், ராங்பூர் ரைடர்ஸ், கொமிலா விக்டோரியன்ஸ், சிட்டகொங் வைகிங்ஸ், சில்லெட் சிக்ஸ்செர்ஸ், ராஜ்ஷாஹி கிங்ஸ், குல்னா டைடன்ஸ் ஆகிய 7 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில், இலங்கை அணி வீரர்கள் 9 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஷெஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா, தசுன் சானக்க மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், நிரோஷன் திக்வெல்ல மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் சொந்த காரணங்கள் காரணமாக விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த முறை ஷகிப் அல் ஹசன் தலைமையிலான டாக்கா டைனமைட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில் சங்ககாரா இடம் பெற்றிருந்தார், இந்த ஆண்டும் அவர் டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்