சென்னை மைதானத்தில் புதிய சாதனை படைத்த டோனி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய அரை சதத்தின் மூலம் சர்வதேச போட்டிகளில் 100 அரை சதங்களைக் கடந்து டோனி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா அவுஸ்திரேலியா இடையே முதல் ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 281 ஓட்டங்களைக் குவித்தது. தொடக்கத்தில் 11 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

பின்னர் ஹர்திக் பாண்டியாவும் டோனியும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரசிகர்களின் அமோக வரவேற்புகளுக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய டோனி அரை சதத்தைக் கடந்தார்.

88 பந்துகளில் 79 ஓட்டங்களைக் குவித்தார். இந்த அரை சதத்தின் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது நூறாவது அரை சதத்தைக் கடந்தார் டோனி. டோனி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 66 முறையும், டெஸ்ட் போட்டிகளில் 33 முறையும் டி20-யில் ஒருமுறையும் அரை சதம் விளாசியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்