இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் ஒரு நாள் போட்டித்தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
கோஹ்வி, மனிஷ் பாண்டே ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், ரகானே 5 ரன்னிலும் ஆட்டம் இழக்க ரோகித் ஷர்மா 28 ரன்களுக்கு ஆட்டம் இழந்த போது 16 ஓவர்களில் இந்தியா 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்தது.
இந்த தருணத்தில் தான் களமிறங்கினார் டோனி. டோனி 88 பந்துகளில், 79 ரன்கள் குவித்தார்.
பேட்டிங் செய்வதற்காக பிட்சை நோக்கி டோனி நடக்க ஆரம்பித்த போது சென்னை ரசிகர்கள் அவருக்கு அரங்கமே அதிரும் வகையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
‘ டோனி’, ‘டோனி என்று கேலரியில் இருந்த ரசிகர்கள் ஒருமித்த ஒலியில் குரலெலுப்பினர்.
The King returns to Chennai #TeamIndia #IndvAus pic.twitter.com/p8sd5RtamH
— BCCI (@BCCI) September 17, 2017