இந்தியா - அவுஸ்திரேலியா ஒருநாள் போட்டி: நேரடி ஒளிபரப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்கள் சொதப்பியதால் இந்தியா 11 ஓட்டங்கள் சேர்ப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

அணி தலைவர் விராட் கோஹ்லி டக் அவுட்டானார். பின்னர் வந்த கேதர் ஜாதவ் நிதானமாக விளையாடி 54 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.

இதையடுத்து ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டோனி - பாண்டியா ஆகிய இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்

அரைசதத்தை பூர்த்தி செய்த பாண்டியா 83 ஓட்டங்களில் அவுட்டானார். தற்போது டோனியும், புவனேஷ்குமாரும் விளையாடி வருகிறார்கள்.

நேரடி ஒளிபரப்பை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்