சேவாக் முட்டாள்தனமாக பேசுகிறார்: விளாசிய சவுரங் கங்குலி

Report Print Raju Raju in கிரிக்கெட்

வீரேந்திர சேவாக் முட்டாள்தனமாக பேசுகிறார் என சவுரங் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்ப்ளே ராஜினாமா செய்தார்.

இதை தொடர்ந்து பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் உட்பட பலர் விண்ணப்பித்தனர்.

பின்னர் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தெரிவு செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சேவாக் கூறுகையில், பயிற்சியாளரை நியமிப்பவர்கள் அதிகாரம் படைத்தவர்களாக உள்ளதால் அவர்களை மீறி சுதந்திரமாக செயல்ப்பட முடியாது.

எனவே இனி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டேன் என கூறினார்.

புதிய பயிற்சியாளரை தெரிவு செய்யும் பொறுப்பில் உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரங் கங்குலியிடம் சேவாக் கருத்து குறித்து கேட்ட போது, இது குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.

சேவாக் முட்டாள்தனமாக பேசுவதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்