வங்கதேசத்தில் கலக்கப்போகும் சங்கா உட்பட 11 இலங்கை வீரர்கள்

Report Print Basu in கிரிக்கெட்

வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் விளையாட இலங்கையிலிருந்து 11 வீரர்கள் ஒப்பந்தும் செய்யப்பட்டுள்ளனர். விளையாடவுள்ளனர்.

வங்கதேச பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை மிர்பூர் மற்றும் சிட்டகொங் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதில் டாக்கா டைனமைட்ஸ், ராங்பூர் ரைடர்ஸ், கொமிலா விக்டோரியன்ஸ், சிட்டகொங் வைகிங்ஸ், சில்லெட் சிக்ஸ்செர்ஸ், ராஜ்ஷாஹி கிங்ஸ், குல்னா டைடன்ஸ் ஆகிய 7 அணிகள் பங்குபற்றவுள்ளன.

இந்நிலையில், A முதல் F வரையிலான குழுக்களாகப் பிரிக்கப்பட்ட வீரர்களுக்கான ஏலம் 70 ஆயிரம் அமெரிக்க டொலரிலிருந்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை இடம்பெற்றது.

டாக்காவில் இடம்பெற்ற ஏலத்தில் 112 உள்ளூர் வீரர்கள், இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் என 208 வெளிநாட்டு வீரர்கள் வீரர்கள் பங்கேற்றனர்.

இங்கிலாந்திலிருந்து அதிகபட்சமாக 62 வீரர்கள் ஏலத்தில் போட்டியிட்டதுடன், இலங்கையிலிருந்து 28 வீரர்களும், பாகிஸ்தானிலிருந்து 46 வீரர்களும் ஏலத்தில் இடம்பெற்றனர்.

ஏலத்தில் பங்கேற்ற 28 இலங்கை வீரர்களில் 11 பேர் வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை வீரர்களின் விபரம்: திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா (ராங்பூர் ரைடர்ஸ்), குமார் சங்கக்கார (டாக்கா டைனமைட்ஸ்), ஜீவன் மெண்டிஸ், தில்ஷன் முனவீர (சிட்டகொங் வைகிங்ஸ்) சீக்குகே பிரசன்ன, ஷெஹான் ஜெயசூரிய (குல்னா டைடன்ஸ்), தசுன் சானக்க, வனிந்து ஹசரங்க, சதுரங்க டி சில்வா (சில்லெட் சிக்ஸ்செர்ஸ்), மேத்யூஸ் (கொமிலா விக்டோரியன்ஸ்).

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்