அக்சர் படேலுக்கு காயம்..இந்திய ஒரு நாள் அணியில் இடம்பிடித்தார் நட்சத்திர வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

அக்சர் படேல் காயமடைந்ததால் அவருக்கு மாற்றாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஜடேஜா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

இதற்கான இந்திய அணியில் அக்சார் பட்டேல் இடம்பிடித்திருந்தார். சென்னை மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்ட போது அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். நாளைய போட்டியில் ஜடேஜா ஆடும் லெவனில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஜடேஜா, ஒருநாள் போட்டிகளில் சமீப காலமாக விக்கெட்டுகளை வீழ்த்தவும் ஓட்டங்களை கட்டுப்படுத்தவும் திணறி வரும் இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers