ஓய்வை அறிவித்தார் பிரபல நட்சத்திர வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்கா நட்சத்திர வீரர் ஜே.பி.டுமினி அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான 33 வயதான ஜே.பி.டுமினி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த யூலை மாதம், இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியில் விளையாட டுமினிக்கு இடம் வழங்கப்படவில்லை.

இதனையடுத்து, தற்போது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய டுமினி, இதுவரை தென்னாப்ரிக்க அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 சதம், 6 அரைசதம் உள்பட இரண்டாயிரத்து 103 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...