இந்தியா மற்றும் இலங்கை அணியுடனான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் புஜாரா 128 ஓட்டங்களுடனும், ரகானே 103 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
— Cricvids (@Cricvids1) August 3, 2017
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி 13 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அவர் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹெரத்தின் பந்தை, ஆப் திசையில் அடித்து ஆட முயன்ற போது, எதிர்பாராமல் சிலிப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.