சச்சின் வரிசையில் கோஹ்லி இல்லை: விளக்கம் தரும் பாகிஸ்தான் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
247Shares

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமணன் வரிசையில் கோஹ்லியை சேர்க்க முடியாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால், ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவரின் ஆட்டத்தைக் கண்டு, வருங்கால சச்சின் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான மொகமது யூசப், நாங்கள் ஆடிய காலத்தில் இருந்த கிரிக்கெட்டின் தரத்தை தற்போது உள்ள தரத்துடன் ஒப்பிட முடியாது.

விராட் கோஹ்லி சிறந்த துடுப்பாட்ட வீரர் தான், அவர் ஆடுவதை நான் பார்க்க விருப்பம் கொண்டவன் தான், இருப்பினும் சச்சின், டிராவிட், லட்சுமணன் வரிசையில் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் வாசிம் அக்ரம், வாக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், சக்லைன் முஷ்டாக் ஆகியோருக்கு எதிராக ஓட்டங்கள் எடுப்பது சிறிய விடயம் கிடையாது, டெண்டுல்கர், டிராவிட் துல்லியத்தை நோக்கிச் சென்றவர்கள்.

தங்கள் ஆட்டத்தை மேம்படுத்த நிறைய நேரம் செலவிட்டவர்கள். நான் அவர்களிடம் இருந்து நிறை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

விராட் கோஹ்லி சிறந்த வீரர் அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இப்போது காலங்கள் மாறிவிட்டன என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்