178 இன்னிங்ஸ்களில் 558 விக்கெட்டுகள்... இந்தியாவை வீழ்த்த புதிய வீரரை களமிறக்கிய இலங்கை அணி

Report Print Basu in கிரிக்கெட்
470Shares

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் புதிய சகலதுறை வீரரை களமிறக்கியுள்ளது இலங்கை அணி. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய லஹிரு குமுார காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக 30 வயதுடைய சகலதுறை வீரர் மலின்த புஷ்பகுமார இலங்கை அணிக்காக இன்றைய ஆட்டத்தின்மூலம் தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ளார்.

இதுவரை 99 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள மலின்த புஷ்பகுமார 178 இன்னிங்ஸ்களில் 558 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

கொழும்பில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துள்ளார்.

முதல் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்கள் குவித்துள்ளது. 19.2 ஓவர்களி வீசிய மலின்த புஷ்பகுமார விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்