எடுபடாத இலங்கை பந்துவீச்சு: புஜாரா, ரகானே சதம்.. ஓட்டங்கள் குவிப்பில் இந்தியா

Report Print Basu in கிரிக்கெட்
314Shares

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 344 ஓட்டங்கள் குவித்துள்ளது.

கொழும்பில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய தொடக்க வீரர்களான தவான் 35 ஓட்டங்களிலும், கே எல் ராகுல் 57 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

இதனையடுத்து, இந்திய அணித்தலைவர் கோஹ்லி 13 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த புஜாரா, ரகானே நிதானமாக விளையாடி ஓட்டங்கள் குவிப்பில் ஈடுபட்டனர்.

சிறப்பாக விளையாடி இருவரும் சதம் அடித்து அசத்தினர். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்கள் குவித்துள்ளது.

புஜாரா 128 ஓட்டங்களுடனும், ரகானே 103 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் ஹேரத், பெரேரா தலா ஒரு விக்கெட்டுகளை மட்டும் கைப்பற்றினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்