டிவில்லியர்ஸ், கெய்ல் சாதனையை முறியடித்த இளம் இந்திய வீரர்

Report Print Basu in கிரிக்கெட்
351Shares

இந்தியாவில் கர்நாடகாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் டிவில்லியர்ஸ், கெய்ல் ஆகியோரின் அதிவேக சாதனையை முறியடித்துள்ளார்.

தென் ஆப்ரிக்க அணித்தலைவர் ஏபி டிவில்லியர்ஸ் 31 பந்துகள் சதம் விளாசி சாதனை படைத்தார். இந்த சாதனையை ஐபிஎல் தொடரில் மேற்கிந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்து முறியடித்திருந்தார்.

இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் இரு ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்துள்ளார்.

கர்நாடகா கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடிய புரோலு ரவீந்திர என்னும் இளம் கிரிக்கெட் வீரர் 58 பந்தில் 144 ஓட்டங்கள் விளாசினார்.

இதில், புரோலு 29 பந்தில் சதம் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் மொத்தமாக 13 சிக்சர், 4 பவுண்டரி அடித்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய புரோலு தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்கின் தீவிர ரசிகன் என்றும், குறைந்தபட்சம் ஐபிஎல் தொடரிலாவது விளையாட வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்