இலங்கை- இந்தியா இடையே இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தலைவர் தினேஷ் சண்டிமால், திரிமன்னே ஆகியோர் விளையாடவுள்ளனர்.
இலங்கை- இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் தொடங்கவுள்ளது.
இலங்கை அணியில் காய்ச்சலால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத தலைவர் தினேஷ் சண்டிமால் இன்றைய போட்டியில் விளையாடுகிறார்.
அதே போல் முதல் போட்டியின் போது காயத்தால் விலகிய குணரத்னேவுக்குப் பதில் திரிமன்னே சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியை பொறுத்தவரை உடல்நலக் குறைவு காரணமாக முதல் டெஸ்ட்டில் விளையாடாத தொடக்க வீரர் ராகுல் இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.