டோனி யார் தெரியுமா? சிலிர்க்கும் வங்கதேச இளம் வீரர்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
406Shares

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி ஒரு லெஜண்ட் என வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் புகழ்ந்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கிண்ணம் அரையிறுதிப் போட்டியின் போது எடுத்த செல்ஃபியை தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது சபீர் அகமது பதிவிட்டுள்ளார்.

உலகின் லெஜண்ட் எம்.எஸ்.டோனியுடன் என்ற தலைப்புடன் அவர் பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த செல்ஃபிக்கு 78,000-த்துக்கும் மேற்பட்டை லைக்குகள் கிடைத்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிரவும் செய்துள்ளனர்.

சாம்பியன்ஸ் கிண்ணம் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

அந்த போட்டியில் 19 ஓட்டங்கள் குவித்த சபீர் அகமது, வங்கதேச அணிக்காக இதுவரை 43 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்