துல்லியமான யார்க்கர்: இங்கிலாந்து வீரரை ஒரு பந்தில் வெளியேற்றிய அர்ஜுன் டெண்டுல்கர்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இங்கிலாந்து வீர்ர் ஜானி பேர்ஸ்டோவை ஒரு பந்தில் வெளியேற்றியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியின் முந்தைய நேரத்தில் இங்கிலாந்து வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவுக்கு பந்து வீசினார்.

இதில் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய துல்லியமான யார்க்கர் மூலம் ஜானி பேர்ஸ்டோவின் காலை பதம் பார்த்தார்.

இதனால் வலி தாங்க முடியாமல் முதல் பந்திலே வெளியேறினார். இருப்பினும் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் முதல் டெஸ்டில் ஆடினார்.

லண்டனில் சச்சினுக்கு வீடு உள்ளது. விடுமுறை காலங்களில் சச்சின் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று விடுமுறை கழிப்பது வழக்கம்.

அது போன்று விடுமுறைக்கு செல்லும் அர்ஜுன் டெண்டுல்கர் வலைபயிற்சியின் போது அங்கிருக்கும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பந்து வீசுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments