8 வருடங்களுக்கு பிறகு இலங்கை அணியுடன் மோதும் இந்தியா

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடனான தொடர் முடிந்தவுடன் இலங்கை செல்லவிருக்கிறது.

இலங்கை அணியுடன் 3-டெஸ்ட் போட்டிகள், 5-ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி என மூத்தரப்பு தொடரில் விளையாட உள்ளது.

இதில் டெஸ்ட் தொடர் ஜுலை 26-ஆம் திகதி துவங்கி ஆகஸ்ட் 12-ஆம் திகதி முடிவடைகிறது. ஒருநாள் தொடர் 20-ஆம் திகதியும், டி20 தொடர் செப்டம்பர் 6-ஆம் திகதியும் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மூன்று தொடர்களில் மோதுவது எட்டு வருடங்களுக்கு பிறகு நடக்கிறது.

இதற்கு முன்னர் இரு அணிகளும் கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய மண்ணில் விளையாடின. அப்போது மூன்று டெஸ்ட் போட்டிகளும், ஐந்து ஒருநாள் போட்டிகளும், இரண்டு டி20 போட்டிகளும் நடைபெற்றன.

இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி20 தொடர் 1-1 என்ற சமநிலையிலும் முடிந்தது.

இலங்கை-இந்தியா தொடருக்கான அட்டவணை 2017

  • முதல் டெஸ்ட் போட்டி : ஜூலை 26-30, GICS, காலி

  • இரண்டாம் டெஸ்ட் போட்டி: ஆகஸ்ட் 3-7, SSC, கொழும்பு

  • மூன்றாவது டெஸ்ட் போட்டி: ஆகஸ்ட் 12-16, PICS, கண்டி

  • முதல் ஒருநாள் போட்டி : ஆகஸ்ட் 20, RDICS, தம்புல்லா

  • இரண்டாம் ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 24, PICS, கண்டி

  • மூன்றாவது ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 27, PICS, கண்டி

  • நான்காவது ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 31, RPICS, கொழும்பு

  • ஐந்தாவது ஒருநாள் போட்டி :செப்டம்பர் 3, RPICS, கொழும்பு

  • டி 20 போட்டி : செப்டம்பர் 6, RPICS, கொழும்பு

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments