டோனிக்கு தெரியும்..சொல்ல வேண்டிய அவசியமில்லை: கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

போட்டியின் போது நேரத்திற்கு ஏற்றாற் போல் விளையாட வேண்டும் என்று டோனியிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5-ஓருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20-போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரை 3-1 என்று கைப்பற்றி இந்திய அணி, அடுத்து நடக்கும் டி20 தொடரில் விளையாடுவதற்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஐந்தாவது ஒருநாள் போட்டியின் போது, டோனியின் மந்தமான ஆட்டத்தை அனைவரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் டோனியின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, டோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், டோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

போட்டியின் போது நேரத்திற்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும் என்றும் அவருக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

டோனியின் ஆமை வேக ஆட்டத்திற்கு மைதானமும் ஒரு காரணம், அது போன்ற மைதானத்தில் சிறப்பாக விளையாடியதை தான் பார்க்க வேண்டும். நான் சுழற்பந்து வீச்சாளர்களை அடித்து ஆட முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை.

பயிற்சியின் போது அனைத்து வீரர்களும் சிறப்பாக தான் விளையாடுகிறார்கள். போட்டி என்று வந்தவுடன் அவர்களால் Singles எடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments