42 ஆண்டு கால கனவு: சொந்த மண்ணில் பலிக்குமா?

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

கிரிக்கெட்டின் தாய் தேசம் என்று சொல்லப்படும் இங்கிலாந்து 42 ஆண்டு கால உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு முறை கூட, சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.

ஆனால் சொந்த மண்ணில் நடப்பதாலும், மிகவும் பலமான ஒருநாள் அணியாக திகழ்வதாலும் இங்கிலாந்து இம்முறை கிண்ணத்தை வெல்லும் என்று பலர் கருத்து கூறுகின்றனர்.

முதன்முறையாக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்றது 1975-ம் ஆண்டு. அப்போது கிரிக்கெட் உலகில் கொடிகட்டிப் பறந்த மேற்கிந்திய தீவுகள் அணி, மிகச் சுலபமாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.

பின்னர் நடந்த உலகக் கிண்ணத் தொடர்களில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, இலங்கை என பலரும் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

ஆனால் 42 ஆண்டு கால உலகக் கிண்ண வரலாற்றில் இங்கிலாந்து ஒரு முறை கூட, சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.

இதுவரை இங்கிலாந்து அணி வென்ற ஒரே உலகக் கிண்ணம், 2010-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் மட்டும்தான்.

மூன்று முறை ஒரு நாள் உலகக் கிண்ணத் தொடரில் இறுதி ஆட்டம் வரை சென்று தோல்வியடைந்துள்ளது இங்கிலாந்து அணி.

கடைசியாக 2013-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கிண்ணம் போட்டியிலும் இங்கிலாந்து அணி, இந்திய அணியிடம் தோல்வியடைந்து கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை இழந்தது.

ஆனால், இம்முறை எப்பாடு பட்டாவது கிண்ணத்தை தன் வசமாக்கும் முனைப்புடன்தான் இருக்கிறது இங்கிலாந்து.

ஜூன் 1-ம் திகதி ஆரம்பமாகும் சாம்பியன்ஸ் கிண்ணம் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, நடப்பு உலக சாம்பியன் அவுஸ்திரேலியா, ஃபார்மில் இருக்கும் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து என பலரும் 'மினி உலகக் கிண்ணத்தை' வெல்லும் முனைப்பில் களம் இறங்க உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments