கோஹ்லியை சீண்டிய பிரபல பாகிஸ்தான் வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணி மோதவுள்ள நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் இந்திய அணித்தலைவர் கோஹ்லியை சீண்டியுள்ளார்.

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இங்கிலாந்தில் யூன் 1ம் திகதி தொடங்குகிறது.

இதில் யூன் 4ம் திகதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குறித்து இருநாட்டு ரசிகர்களிடையும் பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற தங்களுக்கே வாய்ப்புகள் அதிகம்.

இந்திய நட்சத்திர வீரர் கோஹ்லியை எப்படி சமாளிப்பது என்று எங்கள் அணிக்கு தெரியும், அதனால் கோஹ்லியை பற்றி பயப்படவில்லை.

கோஹ்லி சிறந்த துடுப்பாட்டகாரர் தான், ஆனால் என்னிடம் பலமுறை தோற்றுள்ளார்.

கோஹ்லிக்கு எதிராக 4 போட்டிகளில் பந்துவீசியுள்ளேன், அதில் மூன்று போட்டிகளில் அவரது விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளேன்.

அதனால் சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி தனது பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்படுவார் என்று ஜுனைத் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments