கவுண்டி கிரிக்கெட்: தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து சங்ககாரா சாதனை

Report Print Raju Raju in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் முதல் தர போட்டியில் Essex அணிக்கு எதிராக 200 ஓட்டங்கள் குவித்த Surrey அணியின் வீரர் சங்ககாரா தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கவுண்டி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் Surrey அணியும், Essex அணியும் மோதின.

Surrey அணி சார்பாக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

இதன் மூலம் தொடர்ச்சியாக கவுண்டி கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்த 8வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் Surrey அணி சார்பில் இந்த சாதனையை செய்த முதல் வீரர் சங்ககாரா தான்.

இதற்கு முன்னர் நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் முறையே 136, 105, 114 மற்றும் 116* என்ற ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.

39 வயதான சங்ககாரா விரைவில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், உள்ளூர் முதல் தர போட்டியிலிருந்து வரும் செப்டம்பர் மாதம் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments