இது மட்டும் இருந்திருந்தால் 2003-ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் முடிவு மாறியிருக்கும்

Report Print Santhan in கிரிக்கெட்

கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணம் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 359 ஓட்டங்கள் குவித்தது. இந்தியா அணி 234 ஓட்டங்களுக்குள் ஆல்-அவுட் ஆகி கிண்ணத்தை இழந்தது.

இந்நிலையில் 20 ஓவர் போட்டி 2003-ம் ஆண்டு இருந்திருந்தால் உலகக்கிண்ணம் இறுதிப்போட்டி முடிவு மாறியிருக்கலாம் என்று டெண்டுல்கர் கூறி உள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்று படமாக சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட டெண்டுல்கர் கூறுகையில், 20 ஓவர் கிரிக்கெட் முறையால் வீரர்களின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் 359 ஓட்டம் என்பது மிகப்பெரிய இலக்காகும்.இப்போதும் அப்படி இருந்தாலும் 340 ரன் இலக்குகளை கூட எட்டி உள்ளோம். போட்டியில் முறை, விதிகள் சூழ்நிலைகள் என அனைத்துமே மாறியுள்ளதே இதற்கு காரணம்.

20 ஓவர் போட்டி காரணமாக வீரர்களின் மனநிலை உள்பட அனைத்தும் மாறியுள்ளதாகவும், 2003-ஆம் ஆண்டு 20 ஓவர் போட்டி நடைமுறையில் இருந்திருந்தால் உலகக்கிண்ணம் இறுதிப்போட்டி முடிவு மாறியிருக்கலாம்.

இந்திய வீரர்கள் அந்த ஆட்டத்தை வேறு விதமாக கையாண்டிருப்பார்கள். தற்போது அதே வீரர்களை கொண்டு விளையாடினால் அதன் முடிவு வேறு மாதிரியாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments