உலகக்கிண்ணத்தை வெல்லலாம்..ஆனால் இதில் தோற்றால்: விராட் கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் அடுத்த மாதம் 1-ஆம் திகதி சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணியின் ஒரு நாள் போட்டிக்கு தலைவராக கடந்த ஜனவரி மாதம் தான் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.

கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி, இங்கிலாந்துடன் ஒருநாள் தொடரில் விளையாடியது. அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

இந்நிலையில் அவரது தலைமையில் முதல் முறையாக இந்திய அணி ஐசிசி தொடரில் விளையாட உள்ளது. நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய அணி இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து புறப்படும் முன் விராட் கோஹ்லி கூறுகையில், தொடர் சிறிதாக உள்ளது மற்றும் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்பதால், அனைத்து போட்டிகளும் சுவாரசியமாக இருக்கும்.

உலகக் கிண்ணத்தை விட இந்த தொடரில் நிறைய போட்டிகள் இருக்கும். உலக கிண்ணம் தொடரில், லீக் போட்டிகள் இருப்பதால், கடைசி நேரத்தில் வென்று கிண்ணத்தை வெல்லலாம்.

ஆனால், இந்த தொடரில், முதல் போட்டி தோற்றால் கூட அடுத்த சுற்றுக்கு தகுதியாவது சந்தேகம் ஆகி விடும். இதனால், இந்த தொடரின் முதல் பந்தில் இருந்தே சிறப்பாக செயல் படுவோம், என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments