சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு புதிய வியூகம்: அஸ்வின் ஓபன் டாக்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

சாம்பியன்ஸ் கிண்ணம் தொடருக்கு புதிய வியூகம் வகுத்துள்ளதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கடந்த டெஸ்ட் சீசனில் 13 போட்டிகளை உள்ளூர் மண்ணில் விளையாடியது. இதில், 10 போட்டிகளில் வெற்றியை ருசித்ததில் அஸ்வினின் கேரம் பந்துக்கு முக்கியமான இடமுண்டு.

தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதால், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் அஸ்வின் ஓய்வில் இருந்தார். இதையடுத்து புத்துணர்ச்சியுடன் சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்திய அணியுடன் அவர் இணைந்துள்ளார்.

நடப்பாண்டில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்காக சியட் விருது மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், சாம்பியன்ஸ் கிண்ணம் தொடருக்காக புதிய வியூகத்தினை வகுத்துள்ளேன்.

அந்த தொடர் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் முன்னோட்டமாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டங்கள் அமையும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments