ஸ்காட்லாந்தை தகர்த்து பதிலடி கொடுத்த இலங்கை

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடந்த இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்துள்ளது.

முன்னதாக, முதல் பயிற்சி ஆட்டத்தில் வளர்ந்து வரும் அணியான ஸ்காட்லாந்து அணியிடம் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

இந்நிலையில் கென்ட் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச தெரிவு செய்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி 42 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக Craig Wallace 46 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 10 ஓவர்கள் வீசி 1 மெய்டன் ஓவருடன் 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து, 167 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 22வது ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றிப்பெற்றது.

இலக்கை தரப்பில் உபுல் தரங்க 53 ஓட்டங்களுடனும், மெண்டிஸ் 74 ஓட்டங்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை எட்டினர்.

9 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments