பரபரப்பான கடைசி ஓவர்..என்னதான் நடந்தது? பட்லர் செய்த செயலைப் பாருங்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

பத்தாவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்று அசத்தியது.

இந்நிலையில் மும்பை அணிக்காக விளையாடிய பட்லர், இங்கிலாந்து அணிக்கு விளையாடுவதற்காக தாயகம் திரும்பியதால், அவர் அங்கிருந்தே தொலைக்காட்சியில் இப்போட்டியை ரசித்துள்ளார்.

அதில் கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றி பெற்றதும் அவர் செய்த செயல் வைரலாக பரவி வருகிறது.

இப்போட்டியில் புனே அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. களத்தில் மனோஜ் திவாரி மற்றும் ஸ்மித் இருந்தனர்.

மும்பை அணி சார்பில் 20-வது ஓவரை மிட்சல் ஜான்சன் வீசினார். அபாரமாக விளையாடிய திவாரி முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், 2-வது பந்தில் திவாரி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

3-வது பந்தில் 51 ஓட்டங்கள் எடுத்து இருந்த ஸ்மித் பொல்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3 பந்துகளில் 7 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையில் வாஷிங்க்டன் சுந்தர் களமிறங்கினார்.

அவர் எதிர்கொண்ட 4-வது பந்து பேட்டில் படவில்லை. எனினும் ஓட்டம் எடுக்க எதிர்முனையில் நின்று கொண்டிருந்த கிறிஸ்டியன் ஆட வந்தார்.

5-வது பந்தை அடித்து ஆடிய கிறிஸ்டியனால் 2-ஓட்டங்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.

இதனால் கடைசி பந்தில் 4 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மீண்டும் களத்தில் க்றிஸ்டியனும், எதிர் முனையில் சுந்தரும் இருந்தனர்.

கடைசி பந்தை ஜான்சன் வீச, அந்தப் பந்தை கிறிஸ்டியன் அடித்து ஆட ஆனால் அப்பந்தில் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, மூன்றாவது ஓட்டம் எடுக்கும்போது கருணாள் பாண்டியா வீசிய த்ரோவில் ரன் அவுட் ஆனார். மும்பை அணி 1-ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments