கோஹ்லியிடம் கெயில் பேட்டிங் பயிற்சி எடுக்க வேண்டும்: விளாசிய பயிற்சியாளர்

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விரருமான கிறிஸ் கெயில், இந்திய அணியின் தலைவரும், பெங்களூரு அணியின் தலைவருமான விராட் கோஹ்லியிடம் பேட்டிங் பயிற்சி எடுக்க வேண்டும் என்று பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி இந்தாண்டும் பத்தாவது தொடராக துவங்கி நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் 12-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதின.

இப்போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டிய மும்பை இந்தியன்ஸ் அணியை, பொல்லார்டு தன்னுடைய நிதான ஆட்டம் மற்றும் அதிரடியால் மும்பை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

இந்நிலையில் இப்போட்டியில் நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பிய கேப்டன் கோஹ்லி, அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்த போட்டியில் 10,000 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனையை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் கிறிஸ் கெயில், வெறும் 3 ஓட்டங்கள் இருந்த நிலையில் பெளவிலியன் திரும்பினார்.

இதுகுறித்து பெங்களூரு அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் டிரண்ட் வுட்ஹில் கூறுகையில், பயிற்சியின் போது கெயில் சிறப்பாக செயல்படுகிறார்.

அவரின் சிறப்பான ஆட்டத்தை காண அதிக நாட்கள் தேவைப்படாது. ஆனால் அவர் கோஹ்லி மற்றும் பொல்லார்டு ஆகியோரிடம் ஆலோசனை கேட்பது நல்லது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments