மின்னல் வேகத்தில் ஸ்டம்பை குறிபார்த்து அடித்து அகர்வால்! மிரண்டு போன வீரர்கள்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் டெல்லி-புனே இடையேயான லீக் போட்டியின் போது புனே வீரர் அகர்வால் மின்னல் வேகத்தில் ஸ்டம்பை குறிபார்த்து அடித்து டெல்லி வீரர் பந்த்தை வெளியேற்றியது வைரலாகியுள்ளது.

புனேயில் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது.

போட்டியின் போது 15வது ஓவரில் புனே அணி வீரர் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை டெல்லி வீரர் பந்த் square legல் அடித்து ஒரு ஓட்டம் எடுக்க முயன்றார்.

அப்போது, square legல் பந்தை பிடித்த அகர்வால் மின்னல் வேகத்தில் பந்து வீச்சாளர் பக்கம் இருந்த ஸ்டம்பை நோக்கி வீச பந்து நேராக ஸ்டம்பை தாக்கியது.

இதை விக்கெட் என உறுதி செய்த புனே வீரர்கள் அகர்வாலை பாராட்டிய படி கொண்டாடினர். எனினும், களநடுவர் மூன்றாவது நடுவரின் உதவியை நாட வீடியோவை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர் அவுட் என அறிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments