சதம் விளாசிய சாம்சன்! புனேவை ஊதி தள்ளியது டெல்லி

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் புனே அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.

ஐபிஎல் பத்தாவது சீசனில் புனேயில் நடைபெற்ற போட்டியில் புனே அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் நாணய சுழற்சியில் வென்ற புனே அணித்தலைவர் ரஹானே களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் 102 ஓட்டங்களும், கிரிஸ் மாரிஸ் 9 பந்துகளுக்கு 38 ஓட்டங்களும் எடுத்து கைகொடுக்க 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 205 ஓட்டங்கள் எடுத்தது.

புனே எதிராக சதம் விளாசியதன் மூலம் ஐபிஎல் பத்தாவது சீசனில் முதல் சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

இதனையடுத்து 206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய புனே அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே 10 ஓட்டங்களிலும், அகர்வால் 20 ஓட்டங்களிலும் ஜாஹிர் கான் வேகத்தில் சிக்கி வெளியேறினர்.

அவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் டெல்லியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேற, புனே அணி 108 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக அந்த அணித்தலைவர் ஜாஹிர் கான் மற்றும் அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments