எட்டு போட்டியில் 100 சிக்சர்களை விளாசிய சிக்சர் மன்னர்கள்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

ஐபிஎல் அரங்கில் இரண்டாவது அதிவேகமாக 100 சிக்சர்களை விளாசி வீரர்கள் சாதித்துள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடக்கும் இத்தொடரில், எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு பேட்ஸ்மேன்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி ஆரம்பமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 8 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் நடத்திய வாண வேடிக்கை காரணமாக, மொத்தமாக 118 சிக்சர்கள் பறந்துள்ளன.

இதன் மூலம் இதுவரை நடந்துள்ள ஐபிஎல் தொடர் வரலாற்றில், குறைந்த இன்னிங்சில் 100 சிக்சர்களை விளாசி பட்டியலில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு (7 போட்டிகள் 14 இன்னிங்ஸ்) பின்னர் புதிய சாதனை படைத்துள்ளனர் பேட்ஸ்மேன்கள்.

தற்போது டிவிலியர்ஸ், விரைவில் கோஹ்லி என வரிசையாக நட்சத்திர வீரர்கள் ஒவ்வொருவராக, காயத்தில் இருந்து மீண்டு ஐபிஎல் தொடருக்கு திரும்புவதால், இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments