டிவில்லியர்சை தொடர்ந்து கோஹ்லியும் ரெடி..அணிக்கு திரும்பும் திகதி அறிவிப்பு?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி தான் ரெடியாகவிட்டதாக கூறி, தன்னுடைய இன்ஸ்டிராகிராமில் ஜிம்மில் பயிற்சி செய்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்திய அணிக்கு மூன்று வித போட்டிகளில் தலைவராக இருக்கிறார் விராட் கோஹ்லி. இவர் தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு தலைவராக உள்ளார்.

ஆனால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால், பெங்களூரு அணிக்காக விளையாட முடியவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

Can't wait to get back onto the field. Almost there now 💪✌️😃. 14th April ⏳

A post shared by Virat Kohli (@virat.kohli) on

இந்நிலையில் கோஹ்லி தான் காயங்களில் இருந்து குண்மடைந்துவிட்டதாகவும், கூடிய விரைவில் தன்னை மைதானத்தில் பார்க்கலாம் என்று இன்ஸ்டாகிராமில் ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் அவர் அதில் வரும் 14 ஆம் மும்பைக்கு எதிரான போட்டியில் கூட எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார், இதனால் பெங்களூரு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

பெங்களூரு அணியின் மற்றொரு வீரரான டிவில்லியர்ஸ் காயங்களிலிருந்து நேற்றைய போட்டியில் தான் அணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments