மும்பை அணியில் இணைந்த மற்றொரு இலங்கை வீரர்: பாராட்டு விழா நடத்தி அசத்தல்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி இந்தாண்டும் நடைபெற்று வருகிறது.

இது பத்தாம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆகும். இதற்காக இலங்கை விரர் லசித்மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வீரர்களுக்கு நேற்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக முகேஷ் அம்பானி, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரும், இலங்கை அணியின் முன்னாள் வீரருமான சனத்ஜெயசூர்யா கலந்து கொண்டார்.

இதில் அவர் மற்ற விரர்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

மேலும் ஜெயசூர்யா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் மலிங்காவுக்கு தன்னுடைய பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments