பந்தை துரத்திச் சென்று அந்தரத்தில் பிடித்த சஹா! உறைந்த போன வீரர்கள்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது பஞ்சாப் விக்கெட் கீப்பர் சஹா பந்தை துரத்திச் சென்று பறந்து பிடித்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.

பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருன் ஆரோன் வீசிய போட்டியின் 13வது ஓவரை பெங்களூர் அணி வீரர் மன்தீப் சிங் எதிர்கொண்டார்.

மன்தீப் சிங் பந்தை சிக்ஸர் அடிக்க முயல அது வானத்தை நோக்கி பறந்தது, பந்தை துரத்திச் சென்ற விக்கெட் கீப்பர் சஹா கிட்டத்தட்ட பவுண்டரி கோட்டிற்கு அருகே வரை ஓடி சென்று பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார்.

இதை பலரும் பாராட்ட குறித்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments