இவருக்கு மூளை இருக்கா..முன்னாடியே இறங்கிருக்கணும்? பொல்லார்ட்டை திட்டிய வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த பொல்லார்ட்டை மூளை இருக்கா என்று கேட்ட சஞ்சய் மஞ்சரேக்கருக்கு தக்க பதிலடி கிடைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இப்போட்டியில் கடைசியி ஓவரில் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டத்தால் திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான மஞ்சரேக்கர் பொல்லார்ட்டை இப்போ போய் இவரு இறங்குகிறாரே, முன்கூட்டியே போயிருக்க வேண்டாமா, மூளையிருக்கா இவருக்கு என கமெண்ட் அடித்தார்.

ஏனெனில் அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி மிக குறைந்த பந்துகளில் அதிக ஓட்டங்கள் எடுக்க வேண்டி இருந்தது, இதனால் அவர் அப்படி கூறியிருந்தார்.

இது எப்படியோ பொல்லார்ட்டுக்கு தெரியவர, தனது டுவிட்டர் பக்கத்தில், வார்த்தை ஒருமுறை வெளியே வந்துவிட்டால் அதை திரும்ப பெறுவது கஷ்டம். எனவே சரியாக பேசுவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

நீங்கள் பேசத்தான் உங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். நீங்கள் இப்படியே தொடர்ந்து பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments