சூப்பர மேனாக மாறிய சாம்சன்….6 ஓட்டங்களில் நடையை கட்டிய கெய்ல்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபில் தொடரில் டெல்லி-பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது டெல்லி வீரர் சாம்சன் சூப்பர் மேனாக பறந்து கேட்ச் பிடித்து 6 ஓட்டங்களில் அதிரடி வீரர் கெய்லை வெளியேற்றியது வைரலாகியுள்ளது.

பெங்களூரில் நடந்த டெல்லி டேர்டேவில்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது.

முன்னதாக,நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அதன் படி சிக்ஸ் மெஷின் என்றழைக்கப்படும் கெய்லும், அணித்தலைவர் வாட்சனும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர்.

கெய்ல் பட்டையை கிளப்புவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3வது ஓவரில் மோரிஸ் வீசிய பந்தை கெய்ல் விலாச பந்து நேராக சாம்சனுக்கு அருகே சென்றது.

திறமையாக செயல்பட்ட சாம்சன் சூப்பர் மேனாக பறந்து பந்தை பிடித்து அசத்தினார். இதனால், அதிரடி வீரர் கெய்ல் 8 பந்துகளில் 1 பவுண்டரி அடித்து 6 ஓட்டங்களில் வெளியேறினார்.

கெய்லின் கேட்சை சாம்சன் பறந்து பிடித்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments