பந்த் அதிரடி வீண்! டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது பெங்களூரு

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று டெல்லி டேர்டேவில்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 157 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 69 ஓட்டங்கள் எடுத்தார். பெங்களூரு அணி சார்பில் மோரிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டேவில்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் 142 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

டெல்லி டேர்டேவில்ஸ் அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 57 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இரண்டாவது போட்டியில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments