நான் இதை செய்தால்..ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட்டை இழப்பேன்: டிவில்லியர்ஸ் உறுதி

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் கீப்பிங் பணியை தற்போது நான் செய்ய மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரரும், 360 டிகிரி என்று அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் கீப்பிங் பணியை செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் தற்போது காயம் காரணமாக விளையாடாமல் உள்ளார். இதற்காக தகுந்த சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் இது குறித்து கூறுகையில், தற்போது இருக்கும் நிலைமையில் தான் கீப்பிங் பணியை செய்யமாட்டேன். அதையும் மீறி செய்தால் தான் என்னுடைய ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையை இழக்க நேரிடும். அதனால் இதை செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் எதிர்வரும் ஜுன் மாதம் 1 ஆம் திகதி சாம்பியன் டிராபி போட்டி தொடர்வதால், அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், அதனால் கட்டாயமாக கீப்பிங் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments