5 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள்! உண்மையை உடைத்த மலிங்கா

Report Print Santhan in கிரிக்கெட்

தான் தொடர்ந்து ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுப்பதற்கு தன்னுடைய விடா முயற்சியும், கடின உழைப்பும் தான் காரணம் என்று இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா, தன்னுடைய அசுர வேகம் மற்றும் நேர்த்தியான யார்க்கர்கள் மூலம் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து வருகிறார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மலிங்கா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆனால் அப்போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.

இதுவரை மலிங்கா 5 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதில் தென் ஆப்பிரிக்கவுடன் இரண்டு முறை, அவுஸ்திரேலியாவுடன் ஒன்று, வங்கதேசமுடன் ஒன்று, கென்யாவுடன் ஒன்று என ஆகமொத்தம் 5 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.

இது குறித்து மலிங்கா கூறுகையில், தான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்றும், அது தன்னுடைய அணியின் வெற்றிக்கு உதவினாலே போதும் என்று கூறியுள்ளார்.

இது தன்னுடைய விடா முயற்சி மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments