ஐபிஎல்-லில் அதிவேக அரைசதம்: வானவேடிக்கை நிகழ்த்திய கிறிஸ்லின்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடந்த பத்தாவது ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்லின் இந்தாண்டில் நடைபெற்ற போட்டியில் முதல் வீரராக அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நேற்று குஜராத் லயன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் குஜராத் லயன்ஸ் அணி நிர்ணயித்த 183 ஓட்டங்களை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரர்கள், காம்பீர் மற்றும் கிறிஸ்லின்னே அடித்து வெற்றி பெற வைத்தனர்.

இந்நிலையில் கிறிஸ்லின்னே ஐபிஎல் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 7 வது இடத்தில் இணைந்துள்ளார்.

நேற்றைய போட்டியில் 41 பந்துகளை சந்தித்த அவர் 93 ஓட்டங்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள், 8 சிக்சர்களும் அடங்கும்.

கிறிஸ்லின் தனது அரை சதத்தை 19 பந்துகளில் தொட்டார். இதன் மூலம் அதிக வேகத்தில் அரை சதம் அடித்த ஐ.பி.எல். வீரர்களில் ஆந்த்ரே ரஸ்சல், ஹர்பஜன்சிங், டேவிட் மில்லர், ராபின் உத்தப்பா, ஒவாசிஸ் ஷா ஆகியோருடன் இணைந்து 7-வது இடத்தை பிடித்தார்.

யூசுப் பதான் 15 பந்தில் 50 ஓட்டம் எடுத்து அதிவேகத்தில் ஐ.பி.எல்.லில் அரை சதம் எடுத்தவர் என்ற சாதனையில் உள்ளார்.

இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கிறிஸ்லின் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments