என்னுடைய இடத்தை விட்டுத் தரமாட்டேன்: கோஹ்லியிடம் இருந்து பிடிங்கிய ரெய்னா

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளினார் சுரேஷ் ரெய்னா.

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

இத்தொடர்களில் விராட் கோஹ்லி 139 போட்டிகள் விளையாடி 4110 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதின.

இந்த போட்டியில் குஜராத் அணியின் தலைவர் சுரேஷ் ரெய்னா, 34 ஓட்டங்கள் எடுத்த போது ஒட்டு மொத்த ஐபிஎல் அரங்கில், அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி, தன்னிடம் இருந்த முதலிடத்தை மீண்டும் பிடித்தார் சுரேஷ் ரெய்னா.

இதுவரை நடந்துள்ள ஐபிஎல் தொடரில் 148 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரெய்னா, 4144 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இதன் மூலம் 139 போட்டிகளில் 4110 ஓட்டங்கள் குவித்திருந்த விராட் கோஹ்லியின் சாதனையை ரெய்னா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments